திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (16:56 IST)

புகைபிடிக்கும் யானை? தீயாய் பரவும் வீடியோ

கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்காவில் யானை ஒன்று புகைபிடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் யானை புகைபிடிக்கும் காட்சியை பதிவு செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்காவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
யானை புகைபிடிப்பது அரிய காட்சியாக இருப்பதாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. காட்டில் எரிந்து கிடக்கும் ஏதோ ஒன்றை எடுத்து யானை தனை வாயில் வைத்து தூசியை ஊதுகிறது. சாம்பல் தூசி புகை போல் வெளியேறுகிறது.
 
இந்த காட்சியை துரத்தில் இருந்து பார்க்கும்போது யானை புகைபிடிப்பது போல் இருக்கிறது. இந்த வீடியோ 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு தற்போது கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.