பாகிஸ்தான்: காதலருடன் ஓடிய தங்கையை கருணைக்கொலை செய்த அண்ணன்


sivalingam| Last Modified திங்கள், 10 ஜூலை 2017 (06:05 IST)
பாகிஸ்தானில் அவ்வப்போது கெளரவக்கொலை நடப்பது சகஜமாகி வரும் நிலையில் நேற்று காதலருடன் ஓடிப்போன தங்கையை தேடிப்பிடித்து கெளரவக்கொலை செய்த அண்ணன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்றை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன


 
 
பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த இஷாக், நசியா ஆகியோர் அண்ணன் தங்கையாக பாசமுடன் இருந்தனர். இந்த நிலையில் நசியா அதே பகுதியை செர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து அவருடன் ஓடிப்போனார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த இஷாக், தங்கை நசியாவை தேடிக்கண்டுபிடித்து அவரிடம் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அழைத்துவந்தார். வீட்டிற்குள் வந்தவுடன் குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைத்துவிட்டதாக கூறி தான் ஆசை ஆசையாய் பாசம் வைத்த தங்கையை இஷாக் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதுகூறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :