திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (20:17 IST)

அழகிய தங்கை மீது பொறாமை.. 189 முறை கத்தியால் குத்திக் கொன்ற சகோதரி !

ரஷியா நாட்டில் உள்ள பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வருபவர் எலிசவெட்டா துப்ரோவின் (22). இவரது தங்கை ஸ்டேபானியா(17). இவர்களின் பெற்றோர் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் இவர்கள் இருவரும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி வளர்ந்தனர்.
இருவரும் வளர்ந்த பிறகு மாடலிங் செய்து பிரபலங்களாக மாறினர்.இந்நிலையில் எலிசவெட்டா துப்ரோவை விட அவரது தங்கை ஸ்டேபானியா அழகாக இருந்ததால் அவருக்கு மாடலிங் வாய்ப்புகள் அதிக அளவு சென்றதாகத் தெரிகிறது.
 
அதனால், தனக்கு மாடல் வாய்ப்பு இல்லை என்பதாலும், தனது தங்கை தன்னை விட அழகு என்பதாலும் பொறாமை பட்ட  எலிசவெட்டா, தனது தங்கையின் உடலில் 189 முறை கத்தியால் குத்திக் கொன்றார். 
அதுமட்டுமின்றி தங்கையின் கண்கள் மற்றும் காதுகளையும் தோண்டி எடுத்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் எலிசவெட்டாவை கைது செய்தனர். இந்த வழக்கு பீட்டஸ் நகர கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது எலிசவெட்டாவுக்கு 13 ஆண்டுகள் தண்டனை விதித்ஹு நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.