வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:43 IST)

ஒரே குழந்தை இரு முறை பிறந்த அதிசயம்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் லீவிஸ்வீல் நகரை சேர்ந்தவர் மார்கரேட் ஹாகின்ஸ் போமெர்.

 
இவர் கருவுற்று 16 வாரங்கள் ஆகிய நிலையில் அவருடைய வயிற்றில் இருந்த பெண் குழந்தைக்கு sacrococcygeal teratoma, என்னும் டியூமர் கட்டி குழந்தைக்கு ரத்த ஓட்டத்தை தடுத்து, குழந்தையின் இதயம் செயலிழக்க வித்திட்டது. 
 
இந்த டியூமர் 70000 குழந்தைகளின் ஒன்றுக்கு தான் இருக்கும், அதிலும் பெண் குழந்தைகள் தான் இந்த டியூமரால் அதிகம்   பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.
 
23வது வாரம் ஆன போது டியூமர் முழமையாக வளர்ந்து குழந்தையின் இதய துடிப்பு முற்றிலுமாக செயலிழக்கும் நிலைக்கு சென்றதால் மார்கரேட் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
குழந்தையை அழிக்க மனமில்லாத மார்கரேட் ஒரு அதிரடி முடிவெடுத்தார். கிட்டதட்ட 6 மாதங்கள் ஆன நிலையில் குழந்தை ஒர் அளவுக்கு வள்ர்ச்சி பெற்றிருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்து முதுகெலும்பில் இருந்த டியூமரை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர். பிறகு அந்த குழந்தையை மறுபடியும் தாயின் கருவறையில் வைத்து மூடினர்.
 
12 வாரங்கள் பெட் ரெஸ்டில் இருந்த மார்கரேட் மறுபடியும் ஜூன் மாதம் அந்த குழந்தையை பெற்றெடுத்தார். Lynlee Hope என்று அந்த குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.