1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 23 மார்ச் 2015 (10:06 IST)

மரணமடைந்தார் சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ குவான் யூ

சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படுபவரும், அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ மரணமடைந்தார்.
 
சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ நிமோனியாவால் பாதிக்கப்பட்டார் இதனால், அவர் சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக, பிரதமர் லீ ஸியென் லூங் சமீபத்திய ஊடக அறிக்கையில் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான மக்கள் மலர்களை வைத்து நாட்டின் முதலாவது பிரதமரின் உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்து வந்தனர்.
 
இந்நிலையில் சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிகாலை 3.18 மணிக்கு உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
லீ குவான் யூ ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்து, இவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தவராவார்.
 
லீ குவான் யூவின் மறைவுக்கு சிங்கப்பூர் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
 
1990 ஆம் ஆண்டுவரையில் சுமார் 31 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்த லீ குவான் யூ வுக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.