1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (23:20 IST)

வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் ; அதிபர் கிம் ஜாங் ஆலோசனை

வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் நிலவுவதால் அதிபர் கிம் ஜாங் முக்கிய ஆலோசனை செய்து வருகிறார்.
 
வட கொரியா, தென்கொரியா ஆகிய நாடுகள் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையில், தென் கொரியாவுக்கு அமெரிக்க வல்லரசின்  நட்புக் கரம் உள்ளது.

சமீபத்தில் இரு நாடுகளும் ராணுவ பயிற்சி மேற்கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த வடகொரியா, ஏவுகணை சோதனை நடத்தியது. கடந்த ஓராண்டில் 70 முறை ஏவுகணை சோதனை நடத்தியது.
 
இதையடுத்து, அமெரிக்கா, உள்ளிட்ட உலக நாடுகள் வடகொரியாவுக்கு பொருளாதார தடை  விதித்தன.
 
இதனால், வடகொரியாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது, மக்கள் பலர் பசியால் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிக தொகை செலவழிப்பதாலும், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளாலும் பொருளாத தடை விதிக்கப்பட்டுள்ளதால், இன்று இக்கட்டான நிலையில், வட கொரியா உள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
இந்த உணவுப் பஞ்சம் குறித்து அதிபர் கிம் ஜாங் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.