1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (13:12 IST)

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.3 ஆக பதிவு

இந்தோனேசியாவில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
 
சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக  1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுமார் 460 பேர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் ஜகர்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் இன்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 
 
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் குறித்த சேதாரங்கள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.