1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By bharathi
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (12:59 IST)

செல்ஃபி மயக்கத்தால் மாண்டு போகும் மானிடர்கள்

உலக மக்களிடையே வியாபித்து இருக்கும் செல்ஃபி மயக்கத்தால் பலர் உயிரிழந்து வருவது சமூக ஆர்வளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நவீன தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக இன்று அனைவரது கைகளிலும் குழந்தையாக தவழ்கிறது ஸ்மார்ட்போன்கள். கைவிரலில் உலகத்தை அளக்கும் சக்தி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இன்று மனிதர்களின் தவிர்க்க முடியாத பொருட்களாகவே மாறிவிட்டன. குற்றச்செயல்களை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்புவது, பயண தொலைவை கணக்கிடுவது, நினைத்த மாத்திரத்தில் ஒருவருடன் கலந்துரையாடுவது என ஸ்மார்ட் போன்களின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அரதப் பழசான போன்கள் மலையேறி அன்டார்டிக்காவை நம் கண் முன் நிறுத்தும் அதிநவீன போன்களும் சந்தையில் தற்போது விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நம் இளைஞர்களை தற்போது முழுவதுமாக மயக்கி உள்ளது செல்ஃபி மோகம். நம்மை நாமே புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, அதற்கு கிடைக்கும் லைக்குகளுக்காகவே இன்றயை இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அற்ப லைக்குகளுக்காக கடவுள் அளித்த மிகப்பெரிய பரிசான தங்களது வாழ்க்கையை மனிதர்கள் இழந்து வருகின்றனர். ரஷ்யாவில் உள்ள உரல் மலைத் தொடரில் வெடிகுண்டின் விசையை இழுத்து அதனை செல்ஃபி புகைப்படம் எடுத்த இரண்டு பேர் மரணம், மாஸ்கோவில் துப்பாக்கியை தன் தலையில் வைத்து சுட்ட இளம் பெண் ஆபத்தான நிலையில் உயிர் பிழைத்த அதிசயம், மாஸ்கோ பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போன்ற செல்ஃபி  புகைப்படம் எடுக்க முயன்ற 21 வயது வாலிபர் மரணம், ஆகியவை செல்ஃபியின் மயக்கத்தால் ஏற்பட்ட துர்மரணங்கள்.

செல்ஃபி மயக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வை நாம் வாழ வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.