வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : புதன், 11 ஜூன் 2014 (19:26 IST)

மலேரியாவை கொசுக்களை கொண்டே ஒழிக்கும் முறை கண்டுபிடிப்பு

கொசுவினால் பரவும் மலேரியா நோயை கொசுக்களை கொண்டே ஒழிக்கும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மலேரியா Anopheles gambiae என்னும் பெண் கொசுக்களால் அதிகம் பரவுவதாகவும், இந்த கொசுக்களின் உற்பத்தியை குறைப்பதன் மூலம் மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்கலாம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
 
இதன்படி, விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், உற்பத்தி செய்யப்பட்ட புதிய மருபணு மூலம் Anopheles gambiae பெண் கொசுக்கள் உருவாகாதப்படி திட்டமிட்டனர். 
 
மரபணுவின் மூலம் பெண் கொசுக்கள் உருவாகாமல் இருந்தால் மிக விரைவாக மலேரியாவை முற்றிலுமாக aஒழிக்க முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.