பெண் ஆசிரியரை கடத்திய மாணவர்கள்: ஒருதலை காதல் விபரீதம்!

பெண் ஆசிரியரை கடத்திய மாணவர்கள்: ஒருதலை காதல் விபரீதம்!


Caston| Last Modified சனி, 3 டிசம்பர் 2016 (20:51 IST)
இலங்கை நெடுந்தீவில் பெண் ஆசிரியர் ஒருவரை அந்த பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் கடத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த கடத்தலுக்கு காரணம் ஒரு தலை காதல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
 
இளம் பெண் ஒருவர் நெடுந்தீவில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு சென்று திரும்பிய ஆசிரியயை நேற்று முன்தினம் மாலை நான்கு மாணவர்கள் சைக்கிளில் வழி மறித்துள்ளனர்.
 
பின்னர் அந்த மாணவர்கள் அந்த ஆசிரியையை கடத்தியுள்ளனர். இதனை அந்த ஆசிரியருக்கு பின்னால் வந்த ஒருவர் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை ஆசிரியரை கடத்தி வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்டனர்.
 
ஆசிரியரை நான்கு பேரில் இருவர் தப்பியோடியுள்ளனர். மீதமுள்ள இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு தலைக்காதலால் ஆசிரியரை கடத்தியதாக தெரியவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :