ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 அக்டோபர் 2018 (11:11 IST)

ரூ.700 கோடி? டிரம்ப்பின் கோபத்தை ஈடுக்கட்டும் சவுதி

பத்திரிக்கையாளர் ஜமால் விவகாரம் அமெரிக்கா மற்றும் சவுதி இடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. துருக்கி வெளியிடும் ஆதாரங்கள் சவுதிக்கு சிக்கலை அதிகரிக்கின்ற வகையில் உள்ளது. 
 
ஜமால், அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும், இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர்.
 
இவர் துருக்கியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யதுக்கொள்வதாய் இருந்தது. இவர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு சென்ற பின் மாயமானார். எனவே, ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாக கூறி வந்த நிலையில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
 
ஜமால் கொலை செய்தது சவுதிதான் என உறுதியானால் கடுமையான தண்டனைகளை சவுதி சந்திக்க வேண்டும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், டிரம்ப்பின் கோபத்தை தணிக்க சுமார் ரூ.700 கோடியை சவுதி அரேபியா உதவி நிதியாக அமெரிக்காவிற்கு அளித்துள்ளது. 
 
ஆனால், சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.