இந்தியா சென்று வந்த 3 ஆண்டுகளுக்கு தடை - சவுதி கறார்!
இந்தியா சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயண தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சவுதி அரேபியர்கள் சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயண தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரேனா வைரஸின் புதிய வகைகளை தடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.