1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (21:24 IST)

சாத்தான் தூண்டுதல் ...சிறுமியை கற்பழிக்க முயன்ற பாதிரியார் விளக்கம்!

அமெரிக்க நாட்டில் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள கெய்தர்ஸ்பர்க் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு ஆக்டேவியோ என்பவர் பாதிரியாராக உள்ளார். இந்த தேவாலயத்திற்கு நாள்தோறும் வந்து செல்லும் சிறுமி ஒருவர் , ஒருநாள் தனியாக வந்து சாமி கும்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த பாதிரியார், அந்த சிறுமியை தேவாலயத்தின் உள்ளே உள்ள அறைக்கு அழைத்துப்போய் தங்க வைத்துள்ளார்.அதன்பின்னர் சிறுமியிஅ அவர் கற்பழிக்க முயன்றதாகத் தெரிகிறது. அங்கிருந்து வெளியேறிய சிறுமியை இதுகுறித்து யாருக்கும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இதனால், பயந்துபோன  அந்த சிறுமியை அவர் அடிக்கடி தொல்லை செய்துள்ளார். இந்நிலையில், பாதிரியாரின் இம்சையை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி கடந்த மேமாதம் போலீஸில் புகார் செய்தார். இதனையடுத்து பாதிரியார் தாமாவே போலீஸில் சரணடைந்தார். அப்போது,அவர், ’தன் உடலில் சாத்தான் புகுந்து இவ்வாறு செய்யத்தூண்டியது’ என கூறியுள்ளார்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் பாதிரியாரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.