1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2017 (10:40 IST)

குப்பையாய் இருந்து கோலாகலமாய் மாறிய ரஷ்ய வளைகுடா!!

ரஷ்யாவின் உஸுரி வளைகுடா, ஒருகாலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கண்ணாடி பாட்டில்கள் கொட்டும் இடமாய் இருந்தது.


 
 
மேலும் மேலும் நிறைய கண்ணாடி பாட்டில்கள் கொட்டப்பட்டதால்,  மனிதர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. காலங்கள் சென்றன. கூர்மையான உடைந்த கண்ணாடி துண்டுகள் எல்லாம் நீரால் அரிக்கப்பட்டு, கூழாங்கற்களைப் போன்று வழவழப்பாகியது. 
 
சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை என்று அத்தனைக் கண்ணாடி துண்டுகளும் கற்கள் போல உருமாறி, கரைக்கு வந்துசேர்கின்றன. இப்போது, கடற்கரை முழுவதும் வண்ணக் கண்ணாடி கற்களால் அழகாகக் காட்சியளிக்கிறது. 
 
தற்போது இந்தப் பகுதியைக் காண்பதற்காக உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்தும் மக்கள் வருகிறார்கள்.