செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (08:56 IST)

தடுப்பூசி தயாரிக்கணும்; கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா? – இந்தியாவை நாடும் ரஷ்யா!

கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்தியாவின் உதவியை ரஷ்யா எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் உலக நாடுகள் பல கொரோனாவிற்கு தடுப்பூசி, மருந்துகள் கண்டுபிடிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மகளுக்கு இந்த மருத்து அளிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட சோதனைகள் முடியும் தருவாயை நெருங்கியுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் பல ரஷ்யாவிடமிருந்து அந்த ஸ்புட்னிக் மருந்தை வாங்க ஆர்வமாக உள்ளன.

அதிகமான மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதால் ரஷ்யா இந்தியாவுடன் இணைந்து உற்பத்தியை தொடங்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாகி கிடில் ட்மிட்ரிங் “தடுப்பூசி தயாரிக்கும் திறன் இந்தியாவிடம் அதிகமாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்தியா தடுப்பு மருந்து தயாரிப்பதில் நல்ல திறன் கொண்ட நாடு. உலக நாடுகள் தடுப்பூசிகள் கண்டுபிடித்தாலும் அதை உற்பத்தி செய்வதில் பெரும் சிக்கல் உள்ளது. இதில் சர்வதேச ஒத்துழைப்பு ரஷ்யாவிற்கு தேவை” என தெரிவித்துள்ளார்.

இதனால் தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியாவுடன் ஒப்பந்தத்தை ரஷ்யா விரைவில் மேற்கொள்ளும்  என எதிர்பார்க்கப்படுகிறது.