1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:43 IST)

கடையில் கடைசியாக இருந்த லாட்டரி சீட்டுக்கு விழுந்த ரூ.33 கோடி!

Lottery
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்க கடைக்கு சென்றபோது அந்த கடையில் கடைசியாக இரண்டே இரண்டு லாட்டரி சீட்டு மற்றும் இருந்ததாகவும் அந்த லாட்டரிச் சீட்டுக்களை அவர் வாங்கிய நிலையில் அந்த இரண்டில் ஒன்றுக்கு ரூபாய் முப்பத்தி மூன்று கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக லாட்டரி சீட்டு வாங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் கடைக்கு லாட்டரி சீட்டு வாங்க சென்றபோது அந்த கடையில் வெறும் இரண்டு லாட்டரி சீட்டு மட்டுமே இருந்தது
 
இதனை அடுத்து இந்த இரண்டு சீட்டையும் வாங்கி வந்து அவர் வீட்டுக்கு வந்த நிலையில் சில மணி நேரத்தில் அவருக்கு ரூபாய் முப்பத்தி மூன்று கோடி பரிசு கிடைத்ததாக தகவல் வெளியானது
 
இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் சொந்த வீடு வாங்க போவதாகவும் குடும்பத்தை நல்ல முறையில் வைத்துக் காப்பாற்ற போவதாகவும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு உதவி செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran