சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு கலகம் நடந்து வரும் நிலையில் தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கடந்த 2011ம் ஆண்டில் அதிபர் அதாத்திற்கு எதிராக டெரா பிராந்தியத்தில் கிளர்ச்சி உண்டானது. அது மேலும் பல பிராந்தியங்களுக்கும் பரவிய நிலையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சிக்குழு உருவானது.
இந்த கிளர்ச்சி குழுவுக்கும், சிரியா அரசுக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் ஏராளமான சிரிய மக்கள் அகதிகளாக பல்வேறு உலக நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சிரியா நாட்டின் தலைநகரான டெமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் சிரிய அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத், அதிபர் மாளிகையில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி அமைந்தது போல, சிரியாவிலும் கிளர்ச்சியாளர்களின் ஆட்சி விரைவில் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K