1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:46 IST)

அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை; மீனவர்களுக்கு அதிபர் ராஜபக்‌ஷே எச்சரிக்கை!

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை மீறி வந்ததாக கைது செய்வதும், பிறகு இந்திய அரசு தலையிட்டு அவர்களை மீட்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் பல சமயங்களில் மீனவர்களின் படகுகள், வலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபடுவதால் தமிழக மீனவர்கள் பொருளாதாரரீதியான இழப்பையும் சந்திக்கின்றனர்.

இந்நிலையில் இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷே பதவியேற்ற நிலையில் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே வெளிநாடுகளில் இருந்து மீன் இறக்குமதி செய்யப்படுவதற்கு தடை விதித்து, உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். அப்போது பேசிய அவர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உரிய அனுமதி இல்லாமல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் விதத்தில் கூறியுள்ளார்.