வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (14:14 IST)

அரண்மனையில் இருந்து வெளியேறிய எலிசபெத் ராணி? கொரோனா பீதியா...

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிக நடமாட்டம் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு ராணி வெளியேறியதாக தகவல். 
 
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக சீனா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்துள்ளன.
 
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிக நடமாட்டம் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறி விண்ட்சர் அரண்மனையில் தங்கியிருப்பதாகக் வெளியான செய்திகளுக்கு தற்போது அரண்மனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த விளக்கத்தில், ராணி வின்ட்சர் அரண்மனைக்குச் சென்றிருப்பது வார விடுமுறையை கழிப்பதற்காகத்தான். விரைவில் அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.