விசா இல்லாமல் கத்தார் போகலாம். உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு


sivalingam| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (05:03 IST)
சவூதி அரேபிய உள்ளிட்ட 7 நாடுகள் கத்தாருடனாக உறவுகளை துண்டித்துள்ளதை அடுத்து கத்தார் சமீபத்தில் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தியா உள்பட 80 நாடுகள் கத்தாருக்கு விசா இன்றி வரலாம் என்றும், இந்த நடைமுறை இன்று முதல் தொடங்கும் என்றும் அதிரடியாக கத்தார் உள்துறை அறிவித்துள்ளது.


 
 
இந்த சலுகையை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 80 நாடுகளுக்கு வழங்குவதாகவும், கத்தாருக்கு வர குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் பயண சீட்டு ஆகியவைகளே போதும் என்றும் கத்தார் தெரிவித்துள்ளது.
 
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறும் அந்நாட்டு சுற்றுலாத்துறை சேர்மன் ஹாசன் அல் இப்ராஹிம் கூறினார். மேலும் அவர் இதுகுறித்து கூறும்போது கத்தாரின்  வருகையின் போது 80 தேசத்தை சேர்ந்த பயணிகள் இலவச விசாவிற்கு தகுதி பெறுகிறார்கள். இப்பிராந்தியத்தில் கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி தேசமாகி உள்ளது. எங்களுடைய புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாசார, பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,” என கூறியுள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :