Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்க விமானத்தில் பணிப்பெண்கள் அனைவரும் பாட்டிகள்: கத்தார் ஏர்வேஸ் நிர்வாகி கிண்டல்


sivalingam| Last Modified திங்கள், 17 ஜூலை 2017 (05:11 IST)
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் அனைவரும் 26 வயதுக்கு குறைவானவர்களாக இருந்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக அமெரிக்க விமானங்களில் பணிப்பெண்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் பாட்டிகளாகவே இருப்பதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பெக்கர் என்பவர் கிண்டலடித்தார்.


 
 
அதுமட்டுமின்றி அமெரிக்க விமான சேவை குப்பையாக உள்ளதாக அவர் விமர்சனம் செய்தார். இந்த விமர்சனம் அனைத்து தரப்பினர்களையும் குறிப்பாக அமெரிக்க பணிப்பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புக்குரல் எழுந்தது.
 
இதனையடுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக அக்பர் அல் பெக்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அமெரிக்க விமான நிறுவனத்தின்  உதவியாளர்கள் மற்றும் பணிப்பெண்களை அங்கத்தினராக கொண்டுள்ள தலைமை சங்கத்துக்கு எழுதிய மன்னிப்பு கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.


இதில் மேலும் படிக்கவும் :