Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

13 ஆண்டுகளாக பெண்களுக்கு மசாஜ் செய்யும் மலைப்பாம்பு!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (17:58 IST)
ஜெர்மனியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மசாஜ் மூலம் சரிசெய்ய மலைப்பாம்பை பயன்படுத்துகின்றனர்.

 
 
ஜெர்மனியில் டிரெஸ்டென் நகரில் உள்ள, இந்த சலூன் கடையின் உரிமையாளர் பிராங்க் டோசியன். இவர் மலைப்பாம்பை வளர்த்து வருகிறார். அதன் பெயர் மாண்டி.
 
வாடிக்கையாளருக்கு முடித்திருத்தம் செய்த பிறகு கழுத்தில் மாண்டி மலைப்பாம்பு சுற்றப்படுகிறது. அது தனது தசையின் மூலம் லேசாக நெளிந்தபடி கழுத்து பகுதியில் மசாஜ் செய்கிறது. இந்த மசாஜ் பணியில் மலைப்பாம்பு சுமார் 13 வருடங்களாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :