ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 மே 2023 (23:45 IST)

பார் மேலாளரின் மேஜை டிராயருக்குள் மலைப்பாம்பு...

snake
ஆஸ்திரேலிய நாட்டில் பார் மேலாளரின் மேஜை டிராயருக்குள் ஒரு மலைப்பாம்பு இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய நாட்டின் உள்ள பார்  ஒன்றின் மேலாளரின் மேஜை டிராயருக்குள் ஒரு மலைப்பாம்பு சுருண்டு கிடந்துள்ளது. இந்த சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சன்சைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பேஸ்புக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த மேஜை டிராயரில் கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அந்த பெரிய மலைப்பாம்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் அந்த மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.