திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:04 IST)

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின்!!

புதிய பொருளாதார தடைகள் உறவுமுறையை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 

 
யுக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தால் அது இருநாடுகளுக்கு இடையில் உள்ள உறவுமுறை கடுமையாக பாதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எச்சரித்துள்ளார்.
 
டிசம்பர் 30, 2021 வியாழக்கிழமை, இருநாட்டு அதிபர்களுக்கு இடையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த தொலைபேசி அழைப்பில், புதின், பைடனை மேற்கூறியபடி எச்சரித்தார். அதே அழைப்பில் ரஷ்யா, யுக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் தக்க பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார் ஜோ பைடன். யுக்ரைனின் கிழக்கு எல்லையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக யுக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
ஆனால் ரஷ்ய தரப்போ தன் நாட்டு எல்லைக்கும் தன் துருப்புகளை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக் கொள்ள தங்களுக்கு சுதந்திரமிருக்கிறது என்கிறது, மேலும் யுக்ரைன் மீது படையெடுக்க எந்தவித திட்டமும் இல்லை என்றும் மறுத்துவருகிறது. உலகின் இரு முக்கிய நாட்டு அதிபர்கள் பேச்சு வார்த்தை நடத்துவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை என்பது நினைவுகூரத்தக்கது.