பிரதமர் மோடி ரஷ்யா வர வேண்டும்: அதிபர் புதின் அழைப்பு
பிரதமர் மோடி இந்தியா வரவேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்று உள்ள நிலையில் அங்கு அவர் ரஷ்ய துணை பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனை அடுத்து அவர் அதிபர் புதினை சந்தித்த நிலையில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வரவேண்டும் என்று புதின் அழைப்பு விடுத்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறிய புதின் உலக நாடுகளுடன் நம்முடைய நட்புறவை வளர்க்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் நாட்டு நலனுக்கு எது நன்மையோ அதற்கு தேவையானதை செய்யும்படி பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்
மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் அமைச்சர் ஜெய்சங்கரிடம் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran