Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜப்பானில் உள்ள ஆண்களின் தீவிற்கு ஏற்பட்ட சிக்கல்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 12 ஜூலை 2017 (20:09 IST)
ஜப்பானில் உள்ள ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் தீவுக்கு உலக பாரம்பரிய சின்னம் வழங்கப்பட்டது. தற்போது அந்த சின்னத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 
 
ஜப்பான் கிழக்கு கடலின் ஒகினோஷிமா பகுதியில் இந்த தீவு அமைந்துள்ளது. இங்கு பெண்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் பெண் கடவுளை வழிபடுகின்றனர்.
 
குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் ஆண்களும் அனுமதிக்கப்படுகின்றன. ஆண்கள் அங்குள்ள கடலில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்பது கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில் இந்த தீவுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதால், இந்த தீவிற்கு இனி யாரும் அமனுமதிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :