1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 9 மே 2020 (16:44 IST)

சீனாவுக்கு ஆதரவு அளித்துள்ள அதிபர் டிரம்ப்... தேர்தல் அச்சம் காரணமா ?

சீன வைரஸை நுள்நோக்கத்துடன் வெளியிட்டிருக்காது என தான் நம்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்  தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பல உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா வைரஸால் முப்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து மருத்துவ பொருட்க்களை வாங்கின. இதில் அதன் தரம் குறித்து  ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்தியாவும் இனிமேல் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் இழப்பீடு கேட்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஜெர்மன் நாடும் சீனாவிடம் 16,500 கோடி டாலர் இழப்பீடு கேட்டுள்ளதாக ஜெர்மனி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் கூறியதாவது :சீனாவில் இருந்து கொரொனா பரவத் தொடங்கிய முதலே அதைக் கட்டுப்படுத்த முயன்றிருந்தால் உலகம் முழுவதும் கொரொனா பரவியிருக்காது… ஜெர்மனி கேட்ட இழப்பீடு தொகையை விட அதிகம் கேட்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  சீன வைரஸை நுள்நோக்கத்துடன் வெளியிட்டிருக்காது என தான் நம்பவில்லை என்று  தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னாதால்க செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை செயலர் மைக் பாம்பியோ, கொரொனா தொற்று எங்கிருந்து பராவியது என்று உறுதியாகக் கூற முடியாது என தெரிவித்திருந்தார்.

ஆனால், வாரத்தில் சீனாவில் உள்ள வூஹான் மாநிலத்தில் தான் கொரொனா உருவாக்கப்பட்டதற்காக காரணம் தங்களிடம் இருப்பதாக அவர் கூறிய நிலையில், இன்று தன் கருத்தை மாற்றிப் பேசியுள்ளார்.

அதேபோல், சீனா உள் நோகத்துடன் வைரஸை வெளியிட்டிடுக்கும் என தான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னால், அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை தோற்கடிக்க சீனா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது சீனாவுக்கு பரிந்து பேசுவது போல் அவர் கூறியுள்ளது, டிரம்ப்  இரண்டாம் முறையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவடுதில் சீனாவில் தலையீடு அதிகம் இருக்குமோ என்றா அச்சத்தில்தான் சீனாவுக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.