வாடிகனில் போப்பாண்டவரை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
மெசிகோ தடுப்புச்சுவர் அமைப்பது உள்பட ஒருசில கருத்துக்களில் போப்பாண்டவருடன் வேறுபாடு கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வாடிகனில் அவரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்,தனது முதல் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்த நிலையில் வாடிகனில் கத்தோலிக்கர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் உடன் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபருடன் பல கருத்துவேறுபாடுகள் கொண்டிருப்பினும் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்த போப் பிரான்சிஸ், உலகின் ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு, டிரம்ப் தலைமையேற்றுச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். இந்த சந்திப்பின்போது டிரம்ப் மனைவியும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.