1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2016 (14:19 IST)

அதிபரின் வேண்டுகோளை ஏற்று நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்து வரும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.


 

 
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபர் அல்யாக்ஸன்டர் லுகான்ஷோ, நாட்டில் நிலவும் கடுமையான நிதி பற்றாக்குறையை போக்க அந்நாட்டு மக்கள் அனைவரையும் ஆடைகளை கழற்றிவிட்டு வியர்வை சிந்த உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதனால் அதிபரின் ஆணையை ஏற்று அந்நாட்டு மக்கள் பலரும் அவர்களது பணியிடங்களில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக வேலை செய்ய தொடங்கியுள்ளனர். அதை அவர்கள் சமுக வலைதளங்களில் புகைப்படங்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
 
இச்செய்தி தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.