Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்பிணியை ஏமாற்றி, வயிற்றை கிழித்து குழந்தையை திருடி கொலை: பிரேசிலில் கொடூரம்!!

வெள்ளி, 30 டிசம்பர் 2016 (13:33 IST)

Widgets Magazine

கர்பிணி பெண்ணை ஏமாற்றி அவர் வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம்பெண் தைநடா சில்வா. இவரது கர்ப்பபையில் கோளாறு இருந்தது. எனவே, அவரால் குழந்தை பெற்று கொள்ள முடியாது.
 
இதனால் ஏதாவது குழந்தையை திருடி வைத்து கொள்ளலாம் என்று தைநடா சில்வாவும், அவரது கணவரும் முடிவு செய்தனர். அப்போது கர்ப்பிணி பெண்ணை கடத்தி வந்து அவரை கொன்று குழந்தையை திருடிக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினர். 
 
உடனே, வாட்ஸ்ஆப் மூலம் செய்தி ஒன்றை அனுப்பினார்கள். அதில், கர்ப்பிணி பெண்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு குழந்தைகளுக்கான ஆடைகளை அன்பளிப்பாக தர தயாராக இருக்கிறோம் என்று கூறப்பட்டு இருந்தது.
 
இதை ரயானி கிறிஸ்டினி என்ற கர்ப்பிணி பெண் பார்த்து விட்டு அந்த தம்பதியை சந்திக்க சென்றார். அவரை ஏமாற்றி தங்களது வீட்டுக்கு அழைத்து சென்று, ரயானி கிறிஸ்டினியை வலுக்காட்டாயமாக பிடித்து வைத்து வயிற்றை கத்தியால் அறுத்து குழந்தையை எடுத்தனர்.
 
அந்த பெண் வயிற்றில் 9 மாத குழந்தை இருக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வயிற்றுக்குள் 7½ மாத குழந்தைதான் இருந்தது. அந்த குழந்தையை எடுத்து வளர்க்க முடியாது என கருதிய அவர்கள் குழந்தையை கொன்று விட்டனர். வயிற்றை கிழித்ததால் தாயும் இறந்து விட்டார். பின்னர் இருவரது பிணத்தையும் எரித்து சாம்பலாக்கினர்.
 
ரயானி கிறிஸ்டினி இரண்டு வாரத்துக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பல்வேறு கோணத்தில் விசாரித்த போலீஸ் தைநடா சில்வாவை மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜெ.வால் விரட்டப்பட்ட தினகரன் கையில் அதிமுக...

அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜெ.வின் தோழி சசிகலாவின் வலது கரமாக, அவரின் ...

news

முதல்வரானவுடன் சசிகலாவின் முதல் கையெழுத்து டாஸ்மாக் மூடல்: பன்னீருக்கு குட் பை!

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் தமிழக முதல்வராக ...

news

ஜெ.வின் மர்ம மரணம் பற்றி தைரியமாக கேள்வி கேளுங்கள் - மு.க.ஸ்டாலின் அதிரடி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து, முதல்வர் மற்றும் மற்ற ...

news

ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட தவறான, தடை செய்யப்பட்ட மாத்திரைகள்?: மருத்துவர் ஆவேசம்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறிவந்தாலும் ...

Widgets Magazine Widgets Magazine