1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2023 (07:19 IST)

போர் தோற்கடிக்கப்பட வேண்டும்.. அனைத்து போரும் தோல்வி அடைந்துள்ளன. போப்பாண்டவர்..!

போர் என்பது தோற்கடிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அனைத்து போர்களும் தோல்வியில்தான் முடிந்து உள்ளது என்றும் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றும் பயங்கரவாதம் போருக்கு பயங்கரவாதமும் ஓரும் தீர்வுக்கு வழிவகுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதமும் போரும் எந்த ஒரு தீர்வுக்கும் வழிவகுக்காது என்றும் அதற்கு பதிலாக அது பல அப்பாவி மக்களின் மரணம் மற்றும் துன்பங்களுக்கு காரணமாக விளங்கிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

போர் என்பது தோற்கடிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற அனைத்து போரும் தோல்வியை தான் தழுவியுள்ளது என்றும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ பிரார்த்தனை செய்வோம் என்றும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு ஆயுதங்கள் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று வாடிகனில் நடந்த பிரார்த்தனையின் போது அவர் இவ்வாறு கூறினார்

Edited by Siva