வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:21 IST)

3 விஞ்ஞானிகளுக்கு 2021 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

3 விஞ்ஞானிகளுக்கு 2021 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது

 
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் வேதியியல் இயற்பியல் இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் 16ஆம் தேதி வரை அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்தவகையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே (syukuro Manabe), ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன் (Klaus Hasselmann) மற்றும் இத்தாலியை சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி (Giorgio Parisi) ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
 
புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றுக்காக இந்த நோபல் பரிசு இந்த மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.