வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 2 நவம்பர் 2022 (08:32 IST)

நமக்கு நாமே மெசேஜ் அனுப்பலாம்.. வாட்ஸ் அப்பில் வரவுள்ள புதிய அம்சம்!

WhatsApp
உலகின் முன்னணி சமூக வலைதளமான வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் வாட்ஸ்அப் பயனாளிகளின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது வாட்ஸ்அப் நிர்வாகம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
பொழுதுபோக்கு உரையாடல் மட்டுமின்றி வணிக நோக்கத்திற்காக தகவல் பரிமாற்றம் உள்பட பல்வேறு வகைகளில் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபகாலமாக வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிரடி புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய அம்சமாக நமக்கு நாமே மெசேஜ் அனுப்பி கொள்ளும் வசதி வர உள்ளதாக வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
அதுமட்டுமின்றி சில புகைப்படங்களையும் மங்கலாக்கும் பிளர் அம்சமும் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயனாளர்களுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva