பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? மத்திய அமைச்சர் தகவல்
கடந்த 245 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாத நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
247வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி செய்தியாளர்களிடம் பேசியபோது எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்டிய பிறகு பெட்ரோல் டீசல் விலையை குறையும்
ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் விலையை நிலையாக வைத்திருக்குமாறு மத்திய அரசு கூறவில்லை என்றும் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் எண்ணெய் நிறுவனங்களே முன்வந்து எரிபொருள் விலையை உயர்த்தாமல் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva