1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2017 (16:01 IST)

உலக நாடுகளால் வெளியேற்றப்படும் பாகிஸ்தானியர்!!

வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருவது சில காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


 
 
கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 5,44,105 பாகிஸ்தானியர்கள் பிற நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என புள்ளிவிவரம் கூறுகிறது.
 
134 வெவ்வேறு நாடுகளில் இருந்து இவர்கள் வேளியேற்றப்பட்டுள்ளனர். இந்தியா, லாவோஸ், தோசோ, போர்ட்லூயில், லைபீரியா, கினியா, புருண்டி, மடகாஸ்கர், மலாவி, காங்கோ, டொமினிக் குடியரசு, மொசாம்பிக், அங்கோலா,  எத்தியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் போன்றவை இதில் அடங்கும்.
 
பாகிஸ்தானியர்களை அதிக அளவில் வெளியேற்றிய நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. 
 
அதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், மலேசியா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
 
இந்தியாவில் இருந்து 49 பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.