வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 25 ஜனவரி 2017 (19:30 IST)

பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கு பாலியல் தொல்லை

பாகிஸ்தான் பாராளுமன்ற ஓய்வு அறையில் பெண் எம்.பி. நுஸ்ரத் சஹார் என்பவர் பேசிக் கோண்டிருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.


 

 
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண பெண் எம்.பி. நுஸ்ரத் சஹார் அப்பாஸி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் இம்தாத் பிதாபி பாராளுமன்ற ஓய்வு அறையில் பேசிக்கொண்டு இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவுள்ளார்.
 
இதையடுத்து பாரளுமன்றத்தில் பெண் உறுப்பினருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அப்பாஸி போராட்டத்தில் ஈடுப்பட்டார். பாலியல் தொல்லை கொடுத்த இம்தாத் பிதாபியை அமைச்சர் பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
 
அவருடன் சில பாகிஸ்தான் முஸ்லீம் லீக் பிரிவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் இம்தாத் பிதாபி அப்பாஸியிடம் மன்னிப்பு கெட்டார். அப்பாஸி அதை ஏற்றுக்கொண்டு அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பிரிவினருக்கு நன்றி தெரிவித்தார்.