வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜனவரி 2018 (05:40 IST)

பெனாசிர் பூட்டோ படுகொலைக்கு பொறுப்பேற்பதாக தலிபான் அறிவிப்பு

10 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெனாசிர் பூட்டோவின் படுகொலைக்கு பொறுப்பேற்பதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது

கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பெனாசி பூட்டோவை தீவிரவாதிகள் கொலை செய்தனர். இந்த படுகொலைக்கு தலிபான் தீவிரவாதிகளே காரணம் என அப்போதைய அதிபர் பர்வேஷ் முஷ்ரப் குற்றம் சாட்டியிருந்தபோதிலும் தலிபான் தரப்பில் இருந்து இதனை உறுதி செய்யவில்லை

இந்த நிலையில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுமன்சூர் ஆசிம் முப்தி நூர் வாலி எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. 588 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பெனாசிர் பூட்டோவின் கழுத்தில் தீவிரவாதி பிலால் என்பவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பின்னர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து கூட்டத்தினரை கலைத்ததாகவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெனாசிர் வெற்றி பெற்றால் அவர் அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டு தங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பார் என்று தாங்கள் ஊகித்ததால் அவரை கொலை செய்ததாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.