செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார்: ஜனாதிபதி அறிவிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார் என அந்நாட்டின் அதிபர்  ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் சமீபத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்பதும் புதிய தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தானின் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் என்றும் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான்கான் பிரதமராக நீடிப்பார் என்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி  ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார் 
 
இம்ரான்கான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இம்ரான்கான் தான் பிரதமராக நீடிப்பார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது