செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (15:55 IST)

மசூத் அசார் இறக்கவில்லை – குடும்பத்தினர் தகவல் !

புல்வாமாத் தாக்குதலுக்குக் காரணமான மசூர் ஆசார் இன்னும் இறக்கவில்ல எனப் பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் உள்பட இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியான தகவலை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின. ஆனால் இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்றின் சார்பில் அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

அதில் அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஆசார் உயிரோடுதான் இருக்கிறார் என்ற தகவலை மட்டும் கூறியுள்ளார். அவரது உடல்நலம் குறித்த வேறு எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை. இதனால் அவர் உடல்நலம் பாதித்திருப்பதாகக் கூறப்பட்ட தகவல் உண்மைதான் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.