கைமாற்றாய் 2.3 பில்லியன் குடுங்க..! – சீனாவிடம் கைநீட்டிய பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் சீனாவிடம் கடன் கேட்டுள்ளது பாகிஸ்தான்.
இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் அன்னிய செலவாணி இருப்பு குறைந்த நிலையில் பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியிலும் பெரும் பிரச்சினையை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.
சமீபத்தில் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யமுடியாத காரணத்தால் தேநீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. தற்போது நிதி நெருக்கடியை சமாளிக்க சீன வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து 2.3 பில்லியன் டாலர்கள் கடனுதவியாக பெற்றுள்ளது பாகிஸ்தான் அரசு. இதைக் கொண்டு ஓரளவு நிதி நெருக்கடியை சமாளிக்க இயலும் என கூறப்படுகிறது.