வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 6 மார்ச் 2023 (17:38 IST)

முன்னாள் பிரதமரின் பேச்சு, பேட்டியை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கு தடை: அரசின் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேச்சு மற்றும் பேட்டியை ஒளிபரப்ப செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுக்கு சென்றபோது வந்த பரிசு பொருட்களை விற்று பணம் பணமாக்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 
 
இது குறித்த வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்ரான் கான் திடீரென தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இம்ரான்கான் பேச்சு மற்றும் பேட்டியை ஒளிபரப்ப செய்தி நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவால் பாகிஸ்தான் ஊடகங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva