1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (15:07 IST)

சீனா பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை

சீனாவின் கலாசார சின்னங்களில் ஒன்றானது ‘பகோடா’ என்ற மரத்தினாலான கோபுரம். இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

 
சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரமாக இது கட்டப்பட்டுள்ளது. இது 1056-ம் ஆண்டில் லியாவோ ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
 
மரத்தினாலான இக்கோபுரம் 67.31 மீட்டர் உயரம் கொண்டது. இதில் உள்ள மரக்கட்டைகள் 3 ஆயிரம் கன மீட்டருடன் 2600 டன் எடை கொண்டதாகும்.
 
எனவே, உலகிலேயே மிக உயரமான மரத்தினாலான கோபுரம் என பகோடா கோபுரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.