வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (14:05 IST)

தற்கொலை செய்து கொண்டார் ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ்

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் கலிபோர்னியாவில் தற்கொலை செய்து உயிரிழந்தார்.

உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ். இவர் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் திபுரான் நகரில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

உலக மக்களை சிரிக்க வைத்து மகிழ்ந்த இவர் சமீபகாலமாக கடுமையான மன அழுத்ததில் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். அவருக்கு வயது 63.

இவர் நடித்த படங்களில், குட்வில் ஹன்டிங் குட்மார்னிங், வியட்நாம், மிஸ்சஸ் டவுட் பயர், நைட் அட் தி மியூஸியம், ஜூமான்ஜி, ரோபோட்ஸ் ஆகிய படங்கள் மிகவும் பிபலமானவை.

ராபின் வில்லியம்ஸ் ஆஸ்கார் விருது பெற்றவர். ‘குட்வில் ஹன்டிங்’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக இவருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது.

இவரது மனைவி சூசன் ஸ்னெய்டர். இவர் அவருக்கு 3 ஆவது மனைவி ஆவார். இவர்களது திருமணம் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்தது.

வில்லியம்ஸின் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சக நகைச்சுவை நடிகரான ஸ்டீவ் மார்ட்டின், "மிகச் சிறந்த திறமைசாலியும், நடிப்புத் தோழரும், மகத்தான உள்ளமும் கொண்ட ராபின் வில்லியம்ஸின் இழப்பு என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று அவரது மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.“ ராபின் வில்லியம்ஸ் மருத்துவர், விமானி தலைவர், போராசிரியர் என பல வேடங்களில் நடித்து இருந்தாலும் அவர் மிகவும் அன்பான மனிதராக விளங்கினார்“ என ஒபாமா தெரிவித்துள்ளார்.

ராபின் வில்லியம்ஸ் ஆங்கிலத்தில் பெண் வேடமிட்டு நடித்த ‘மிஸ்சஸ் டவுட் பயர்’(Mrs. Doubtfire) என்ற திரைப்படம் தமிழில் ‘அவ்வை சண்முகி‘ ஆக ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.