வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2016 (16:01 IST)

2 மணி நேரத்தில் புற்று நோய்க்கு சிகிச்சை

புற்று நோய் செல்களை 2 மணி நேரத்தில் அழிக்கும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்க ஆய்வாளர் கண்டுப்பிடித்துள்ளார்.


 

 
புற்று நோய் தக்கினால் மரனம் என்ற கொஞ்ச கொஞ்சமாக மாறி வரும் நிலையில் தற்போது அறுவை சிகிச்சை செய்ய முடியாத புற்று நோய் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நைட்ரோபென்சால்டிஹைட் என்ற ஒரு ரசாயனத்தை புற்று நோய் கட்டிக்குள் ஊசி மூலம் செலுத்தி பிறகு ஒளிக்கற்றையைப் பாய்ச்சி உள்ளே செல்கள் அமிலமயமாகி செல்கள் தானாகவே அழியும் வகையில் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
2 மணீ நேரத்தில் இந்த புற்று நோய் செல்கள் அழிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
ஜிடோவின் என்பவர் தற்போது இந்த சிகிச்சை முறையை பரிசோதித்து வருகிறார். மேலும் அது வெற்றி அடைந்தால் அதிக அளவில் கதிர்வீச்சு சிகிச்சை கொண்டு இனிமேல் மோசமான கேன்சர் செல்லையும் விரட்டி அடிக்கலாம் என்று ஜிடோவின் தெரிவித்துள்ளார்.