வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (20:12 IST)

100 புலிகள் மட்டுமே உயிரோடு உள்ளன - வங்கதேசத்தில் அதிர்ச்சி

வங்கதேசத்தின் சுந்தரவனக் காடுகள் பகுதியில் வெறும் 100 புலிகள் மட்டுமே வாழ்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
 

 
மாறிவரும் காலச் சூழ்நிலைகளாலும், மனித தேவைகளினால் காடுகள் அழிக்கப்படுவதாலும் பருவநிலை மாறுபாடுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த பருவநிலை மாறுபாடுகளால், பறவைகள், விலங்குகள் உட்பட சில அரிய உயிரினங்களும் அழிந்து வருகின்றன.
 
வங்கதேசத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகள் 3,860 மைல் அளவு கொண்டதாகும். மேலும், இந்த காடுகள் பெரிய அளவிலான பூனைகள் மற்றும் பெரிய அளவிலான இயற்கை உயிரினங்களுக்கும் வாழ்விடமாக திகழ்வதில் முதலிடம் வகிக்கின்றது.
 
ஆனால், தற்போது இந்த காடுகளில் வெறும் 100 புலிகள் மட்டுமே உயிர் வாழ்ந்து வருவதாகவும், முன்னர் கருதப்பட்டதை விட மிக குறைவான பெரிய பூனைகளே வசித்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
ஏப்ரல் மாதம் முடிவுற்ற ஒராண்டு காலம் வரை கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன் அடிப்படையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாயிருந்த காட்சிகளை வைத்துப்பார்க்கும் பொழுது 83 முதல் 130 புலிகள் மட்டுமே இருப்பதாக பிரான்ஸ் பத்திரிக்கை ஏஜெண்ட் ஆய்வளித்துள்ளது.
 
இது குறித்து வங்கதேச வனவிலங்கு பாதுகாவலர் தபன் குமார் தேய் கூறுகையில், “ஆக மொத்தம் ஏறக்குறைய 103 புலிகள் மட்டுமே சுந்தரவன காடுகளைச் சுற்றி உயிர் வாழ்கின்றன. இது மிகவும் துல்லியமான எண்ணிக்கை தான்” என்று தெரிவித்துள்ளார்.