19 வயது இளம்பெண்ணை கற்பழித்து 30 வருடங்கள் தலைமறைவான முதியவர் கைது
19 வயது இளம்பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டு வழக்கில் 30 வருடங்களாகத் தேடப்படும் முதியவரை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் கைது செய்துள்ளனர்.
1985ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி 19 வயது நிரம்பிய இளம்பெண்ணை படகொன்றில் பாலியல் ரீதியாக தாக்கினார் என்று கிளெமன்ட் ஜோசப் என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
1986ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராவதாக உறுதியளித்த ஜோசப் கிளெமன்ட், அதற்கு பிறகு ஒருபோதும் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இவரை கண்டுபிடிப்போருக்கு 5,000 டாலர் சன்மானமும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விமான நிலையத்திற்கு வந்த இந்த முதியவர் விமான நிலையத்தின் பாதுகாப்புக் கருவி சார்ந்த சோதனைகளுக்கு உடன்பட மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜோசப்பை தனியே விசாரித்தபோது அவர் 30 வருடங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நபர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய மத்திய காவல் துறையினர் 81 வயது நிரம்பிய கிளெமன்ட் ஜோசப்பை டார்வின் விமான நிலையத்தில் கைது செய்துள்ளார்கள்.