ஓவர் நைட்டில் ஒபாமா ஆகனும்: இதுக்கு தான் போல!!
புத்தகம் வெளியிடுவதற்காக சுமார் 60 மில்லியன் டாலர்களை கைப்பற்றியுள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா.
அமெரிக்க அதிபர்களிலேயே முதல் ஆப்ரிக்க அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஒபாமா. அமெரிக்காவை நடுங்கவைத்த ஒசாமா பின் லேடனை கொன்றதால் ஒட்டுமொத்த அமெரிக்க மக்களுக்கு கடவுளாக திகழ்ந்தார்.
இதனால் இரண்டாவது முறையும் அதிபரானார். பின்னர், பதவி காலம் முடிந்தவுடன் அதிபர் பதவியை டிரம்ப்பிடம் ஒப்படைத்தார்.
இனி குடும்பத்துடன் நிம்மதியாக பொழுதை போக்க விரும்பும் ஒபாமாவை புத்தக வெளியீட்டு நிறுவனம் வாழ்க்கை வரலாற்றை எழுத ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.
அதற்காக சுமார் 60 மில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ.400 கோடி ) சம்பளமாக வழங்கவுள்ளது.
இதற்கு முன் ஒரு அமெரிக்க அதிபருக்கு அதிகபட்சமாக, கடந்த 2004ல் பில் கிளிண்டனுக்கு 15 மில்லியன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.