வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2016 (21:54 IST)

72 மணிநேரத்தில் வெளியேறுங்கள்: ஒபாமா உத்தரவு

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் வழங்கி அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். 


 

 
அமெரிக்க அதிபர் தேர்தலில் கிளாரி கிண்டனுக்கு எதிராக டிரம்ப் வெறிப்பெற்றதற்கு காரணம் ரஷ்ய அதிபர் புதின் என்று ஒபாமா ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் இமெயில்களை ஹேக் செய்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்ய அதிபர் புதின் சம்மதத்துடந்தான் அந்நாட்டு உளவுத்துறை மேற்கொண்டுள்ளது என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
 
இதனால் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. மேலும் தூதரக அதிகாரிகள் 35 பேரை அவர்களது குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளது.