வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (17:22 IST)

பிறந்த குழந்தைக்கு போதை மருந்து கொடுத்த நர்ஸ் கைது!

பிறந்த குழந்தைக்கு போதை மருந்து கொடுத்த நர்ஸ் கைது!

இத்தாலியில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு அழுகையை நிறுத்த போதை மருந்து கொடுத்த நர்ஸ்ஸை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்து மீட்டுள்ளனர்.


 
 
இத்தாலியின் வெரொனா நகரில் உள்ள நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்துக்கு கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை நர்ஸ் ஒருவர் பரிசோதனை செய்துகொண்டிருக்கும் போதே அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
 
குழந்தை பிறந்ததும் பலமாக அழுதுள்ளது. அந்த நர்ஸ் எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை அவரால் நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த நர்ஸ் வலியை நீக்கும் மார்ஃபின் என்ற போதை மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளார்.
 
இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக சென்று அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். அதில் குழந்தையை சோதித்ததில் ரத்தத்தில் போதை மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனையடுத்து மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் அந்த நர்ஸ் குழந்தையின் அழுகையை நிறுத்த மார்பின் என்னும் அந்த போதை மருந்தை கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் இதனை உறுதி செய்த போலிசார் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக அந்த நர்ஸ்ஸை கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.