வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (23:59 IST)

வடகொரியாவிடம் உள்ளவை டம்மி ஆயுதங்களா? போட்டு உடைத்த அமெரிக்க உளவுத்துறை

மூன்றே குண்டுகளில் உலகையே அழித்துவிடுவோம் என்று மார்தட்டிய வடகொரியாவிடம் உள்ள பெரும்பாலான ஆயுதங்கள் உண்மையானவை இல்லை என்றும் அவை வெறும் டம்மி ஆயுதங்கள் என்பதை அமெரிக்க உளவுத்துறை ஆதாரங்களுடன் கண்டு பிடித்துள்ளது. எனவே வடகொரியாவை அமெரிக்கா விரைவில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது.



 


சமீபத்தில் வடகொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல் சொங்கின் 105வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது மிக பிரமாண்டமாக பாரியா ராணுவ அணிவகுப்பை அதிபர் கிம் ஜாங் நடத்தினார். அமெரிக்கா உள்பட உலக நாடுகள் தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்ட அணிவகுப்பாக இது கருதப்பட்டது.

இந்த நிலையில் இந்த அணிவகுப்பு புகைப்படங்களை ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ நிபுணர் குழு, அணி வகுப்பில் பல ராணுவ வீரர்கள் தங்கள் கையில் வைத்திருந்தது பொம்மை ஆயுதங்கள் என்றும் அவர்களில் பலர் அணிந்திருந்த கண்ணாடி கூட போலி என கண்டறியப்பட்டுள்ளது.